இன்று ஒரே நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா: தொண்டர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஒருசில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஓசூர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ரு வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான செய்தியின்படி வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் உள்பட தமிழகத்தில், இதுவரை 15 எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply