ஆடி அம்மாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராட தடை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!

கொரோனா தாக்கம் காரணமாக ஆடி அம்மாவாசையை முன்னிட்டு நாளை முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் மூதாதையர்களை நினைத்து புனித நீராட தடை விதிக்கபட்டு உள்ளதால் பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்துகளின் முக்கிய பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தங்கள் மூதாதையர்களை நினைத்து தர்ப்பணம் பூஜைகள் செய்து புனித நீர் நிலைகளில் சென்று புனித நீராடுவது வழக்கம். அந்தவகையில் ஆண்டு தோறும் ஆடி அம்மாவாசை, தை அம்மாவசை ஆகிய இரு நாட்களில் முக்கடல் சங்கமம் கன்னியாகுமரிக்கு வந்து வேத விற்பனர்களிடம் தங்கள் மூதாதையர்களை நினைத்து தர்ப்பணம் பூஜைகள் செய்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராட குமரி மாவட்டம் மட்டுமின்றி,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஆண்டு தோறும் பல லட்ச கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். அந்தவகையில் நாளை ஆடி அம்மாவாசையை முன்னிட்டு கொரோனா தாக்கம் காரணமாக கன்னியாகுமரியில் வருகை தரவும் புனித நீராடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கபட்டு உள்ளது.

Leave a Reply