வடசேரி கோயிலில் கொள்ளை முயற்சி..!

குமரி மாவட்டம் வடசேரி காசி விஸ்வநாதர் கோவிலில் கொள்ளை முயற்சி. கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்து, கோவில் பூட்டை உடைக்க முயன்ற போது பொதுமக்கள் திரண்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம். குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் வழக்கம்போல் நேற்று மாலை பூஜைகள் முடித்து நிர்வாகிகள் கதவை பூட்டிவிட்டு சென்றனர். இரவில் திடீரென இரு கொள்ளையர்கள் கோயிலுக்குள் நுழைந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திசைமாற்றி திருப்பி வைத்து விட்டு கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

ஊர்மக்கள் நடமாட்டம் காணப்பட்டதால் அவர்களது கொள்ளை முயற்சி தோல்வியடைந்த நிலையில், அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகிகள் வடசேரி போலீசில் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏற்கனவே இக்கோயிலில் மூன்று முறை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை கண்டறிய வேண்டும் என கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply