தர்மபுரம் முதல்நிலை ஊராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தர்மபுரம் முதல்நிலை ஊராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு ரூ 9 ஆயிரம் முதல் 15,000 வரை கட்டாய வசூல். ஊராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மாறாக, பாஜகவை சேர்ந்த ஒரு ஊராட்சி தலைவரே குடிநீர் இணைப்பிற்கு முறையான ரசீது வழங்காமல் பொதுமக்களிடம் ரூ 9 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை வசூலிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து ஊர் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர். இது குறித்து ஊர் பொது மக்கள் கூறியதாவது:

குமரி மாவட்டம் தர்மபுரம் முதல்நிலை ஊராட்சி பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற ரூ 9,000 முதல் 14,000 வரை ஊராட்சி நிர்வாகத்தால் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முறையான ரசீது வழங்கப்படுவதில்லை.

குடிநீர் இணைப்புக்கு ரூ 3500 ரசீது தந்துவிட்டு ரூ 14 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். ஊராட்சி நிர்வாகத்தில் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, இவ்வாறு பொதுமக்களிடமிருந்து குடிநீர்க் இணைப்பிற்காக வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தையும் வேண்டும் பொதுமக்களிடம் திரும்பி வழங்க வேண்டும். மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு ஜல் ஜீவன் திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இலவசமாக குடிநீர் இணைப்புகளை வழங்கி வருகிறது.

ஆனால் தர்மபுரம் ஊராட்சி தலைவர் இருக்கும் பாஜகவை சேர்ந்த ரங்கநாயகி அவரது கட்சி அறிவித்த விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்து வருகிறார். இதுபோன்ற தவறான கொள்கைக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply