இருளப்பபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட பணியினை சுரேஷ்ராஜன்MLA துவக்கி வைத்தார்..!

இருளப்பபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10லட்சம் ஒதுக்கீடு செய்து பணியினை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.N.சுரேஷ்ராஜன் MLA அவர்கள் துவக்கி வைத்தார்.

உடன் சிவதேவஸ்தானம் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் வழக்கறிஞர் திரு.T.உதயகுமார், மாநகர செயலாளர் திரு.R.மகேஷ், திரு.ஷேக் தாவூது, திரு M.J.ராஜன், திரு.A.அசோக் குமார், திரு.ஸ்டாலின், திரு.A.கோகுலன், திரு.S.கணபதி வேல் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply