பெரியார் அவமதிக்கப்படுவதை கண்டுகொள்ளாத அ.தி.மு.க.! – கனிமொழி தாக்கு

சுய மரியாதை இல்லாத அ.தி.மு.க, பெரியார் அவமதிக்கப்படுவதைக் கண்டுகொள்வதில்லை, பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் வீசி சமூக அமைதியைக் கெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் வீசப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதற்கெடுத்தாலும் பெரியார் என்று கூறும் தீவிர வலதுசாரிகள்தான் இதை செய்திருப்பார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள ட்வீடில், “தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை

எடுக்காமல் இருப்பது ஏன்? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதைப் பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply