நாகர்கோவிலில் முகநூல் மூலம் பழகி இளம்பெண்ணிடம் 30 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை பறித்த வாலிபர் கைது

கன்னியாகுமரி கொட்டாரம் பெருமாள்புரத்தை சேர்ந்த 28 வயது பெண், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், நானும், எனது கணவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். கடந்த ஆண்டு இறச்சகுளத்தில் கேபிள் நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ்குமார் (28) பேஸ்புக் (முகநூல்) மூலம் எனக்கு அறிமுகம் ஆனார். 2 பேரும் நண்பர்களாக பழகினோம். திருமணம் செய்வதாக லோகேஷ்குமார் கூறியதை நம்பி நானும் அவருடன் நெருக்கமாக இருந்தேன்.

அவரது தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என 30 பவுன் நகை வாங்கினார். ரூ.5 லட்சமும் கொடுத்தேன். இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மகளிர் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஷ் குமாரை கைது செய்தனர்.

Leave a Reply