சாத்தான்குளம் அருகே கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

சாத்தான் குளம் அருகே கல்விளை கிராமத்தில் வீட்டிற்கு டிவி பார்க்க வந்த சிறுமியை கல்லூரி மாணவனும், அவனது நண்பரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும் பின்னர் உடலை தண்ணீர் டிரம்பில் வைத்து ஓடையில் வீசி சென்றதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையின் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இச்சிறுமி கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்தச் சிறுமியின் கொலையைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்தக் குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சாத்தான் குள சிறுமி வழக்கில் தானே முன்வைந்து விசாரணை நடத்தி வருகிறது. பிரேத பரிசோதனை முடிந்து சிறுமியின் உடலை பெறமாட்டோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து சாத்தான்குளம் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமி பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் இல்லை என உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடலுக்கு உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சிறுமி கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்ததும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளம் அருகே கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். சிறுமியின் பெற்றோர் உடன் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply