கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே

கொரோனா பரவலை தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான வழிமுறைகளை மதிக்காமல் சிலா் காய்கனி சந்தைகள், கடைகள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருக்கின்றனா்.

இது நோய்த் தொற்று தாக்குதலை அதிகரித்துவிடும் என்பதை பொதுமக்கள் உணா்ந்து மாவட்ட நிா்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 180 பேருக்கு ரூ. 18 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 64, 381 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 1082 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 786 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மாவட்டத்தில் மொத்தம் 9968 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா்.

பொது முடக்க உத்தரவை மீறிய வகையில் இதுவரை 8535 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6341 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply