குழித்துறை ரயில்வே ஸ்டேஷன் முன் சி.ஐ.டி.யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து சி.ஐ.டி.யு சார்பில் குழித்துறை ரயில்வே ஸ்டேஷன் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மாவட்ட சி.ஐ.டி.யு தலைவர் சிங்காரன் தலைமை வகித்தார்.

குழித்துறை நகராட்சி முன்னாள் சேர்மன் டெல்பின், துணைத்தலைவர்கள் சோபன்ராஜ், செல்வதாஸ், துணை செயலாளர் சகாய ஆன்றனி, ரயில்வே யூனியன் கிளைத்தலைவர் ஸ்மைல் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply