கல்வி தொலைக்காட்சியில் என்ன ஒளிபரப்பாகிறது..? அட்டவணை இதோ…!
கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பப்படுவது குறித்த முழு அட்டவணை வெளியாகி உள்ளது.
பள்ளி மாணவர்களின் நலன்களுக்காக, கல்வி தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் தொடங்கிவைத்தார்.
கல்வித் துறையின் கீழ் இந்த தொலைக்காட்சி செயல்படுகிறது. மாணவர்களுக்காக என்ன பாடங்கள், எப்போதெல்லாம் ஒளிபரப்பப்படுகின்றன என்ற அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், 2 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பப்படும். ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 30 நிமிடம் நேரமாகும்.
இது பற்றிய விவரங்களை மாணவர்கள் kalvitholaikaatchi.com என்ற இணையதளத்துக்கு சென்று முழுமையாக அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.