கணவர் என கூறி கள்ளக்காதலனுடன் கொரோனா தடுப்பு முகாமில் தங்கிய பெண் போலீஸ்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஒருவர் தனிமைபடுத்தபட்ட அறையில் கணவர் என கூறி கள்ளக்காதலனை வரவழைத்து தங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் என்ற பகுதியில் பெண் போலீஸ் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் மருத்துவர்களிடம் தனது கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும், எனவே அவரையும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் கூறிய முகவரியில் இருந்த நபர் ஒருவரை அழைத்து வந்து பெண் போலீசுடன் மருத்துவர்கள் தனிமைபடுத்தினர்.

இந்த நிலையில் திடீரென ஒரு பெண் காவல் நிலையத்தில் தனது கணவரை மருத்துவர்கள் கொரோனா இருப்பதாக கூறி அழைத்துச் சென்றதாகவும் தற்போது தனது கணவர் பெண் போலீஸ் ஒருவருடன் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தனக்கு தகவல் வந்தது என்றும், எனவே அவரை மீட்டு தர வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார்

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது கணவர் என்று கூறி கள்ளக்காதலனை பெண் போலீஸ் வரவழைத்ததும் அந்த பெண் போலீசுக்கு திருமணமே ஆகவில்லை என்றும் தெரிய வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சந்தித்ததாகவும் அப்போது காதல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர்கள் சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிகிறது

இந்த நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு என்பது தெரிந்ததும் கள்ளக் காதலனையும் வரவழைக்க அவரை கணவர் என்று கூறி வரவழைத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இருவரையும் தனித்தனி வார்டுகளில் தனிப்படுத்திய போலீசார் தற்போது இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply