ஐ.நா பொருளாதார, சமூக கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஐ.நா அவையின் 75-வது ஆண்டு தினத்தின் ஒருபகுதியாக பொருளாதார, சமூக கவுன்சிலின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளர்.

அதன்பின் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அண்டோனியோ குட்ரஸ், நார்வே பிரதமர் ஆகியோருடன் இணைந்து மோடி கலந்துரையாடுகிறார். கொரோனாவால் உலக நாடுகளில் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply