எத்தனை நாள் தான் வீட்டில் சும்மா இருப்பது? விளம்பர படத்தில் நடித்த நயன்தாரா

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடைபெறாததால் மாஸ் நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறார்கள். இந்த கொரோனா விடுமுறையில் பெரிய நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையும் தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாருமான நயன்தாரா, கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் நிலையில் தற்போது ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. அந்த விளம்பரப் படத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நாயகிக்கு முக்கியத்துவமான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து கடந்த சில ஆண்டுகளாக நடித்து வரும் நயன்தாரா, இன்னும் எத்தனை மாதங்கள் வீட்டில் சும்மா இருப்பது என்ற காரணத்தால் தற்போது விளம்பர படத்தில் நடிக்க வந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த’ மற்றும் ’நெற்றிக்கண்’, ’மூக்குத்தி அம்மன்’, ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்ததும் தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply