குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியம் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

முருகப்பெருமான் மற்றும் கந்தசஷ்டி கவசம் குறித்து ஆபாசமாக அவதூறு வீடியோ வெளியிட்ட கயவர்களை கைது செய்ய வலியுறுத்தி குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியம் பாஜக சார்பில் குருந்தன்கோட்டில் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய தலைவர் திருV.C. கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் திரு Adv சிவகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் பாஜக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், சங்பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply