டாஸ்மாக் கடைகளை 5 மணிக்கு மூட வலியுறுத்தி தோவாளை ஒன்றியத்தில் 101 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்..!

டாஸ்மாக் கடைகளை மாலை 5 மணிக்கு மூட வேண்டும் என வலியுறுத்தி தோவாளை ஒன்றியத்திற்கு உள்பட்ட அனைத்து ஊர்களிலும் 101 இடங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆரல்வாய்மொழி பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், பேச்சாளர் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், லாரன்ஸ், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சேதுவேல், வர்த்தகர் அணி செயலாளர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல செண்பகராமன்புதூரில் ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம், இளைஞரணி செயலாளர் விஜய் ஆகியோர் தலைமையிலும், தோவாளையில் ஊராட்சி செயலாளர் கருணாநிதி, ஊராட்சி துணைத் தலைவர் தாணு, தாழக்குடியில் பேரூர் செயலாளர் சிவகுமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Leave a Reply