வசந்தகுமார் MP தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்

குமரி பாராளுமன்ற உறுப்பினர் H வசந்தகுமார் MP தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் & ராஜேஷ் குமார் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின்,  கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை ஆகியோர் நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த H வசந்தகுமார் MP கூறும்போது” வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளும் போது கன்னியாகுமரி பகுதியில் ஏராளமான தங்குமிட வசதிகள் உள்ளது அதுபோன்று மேற்கு மாவட்டத்திலும் அதற்குரிய வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால் பயணிகள் விரும்பினால் அவர்களுக்கு கன்னியாகுமரியில் இட வசதி செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் உள்ளனர். வருங்காலங்களில் இவர்கள், நோயாளிகளுக்கு கொரானா பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையளிக்கும் அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும், இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலோபதி மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம் என ஆலோசனை கூறியதாகவும் தெரிவித்தார்.

இதே போன்று வரும் 31ம் தேதிக்கு பின்னர் கேரளாவில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதை போன்று தமிழக மீனவர்களும் கேரளாவிற்கு சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply