பல மடங்கு வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தும் நிறுவனங்கள்… சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

கொடுத்த கடனுக்கு பல மடங்கு வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தும் பஜாஜ் பைனான்ஸ், எச் .டி .பி, போன்ற நிறுவனங்களில் அத்துமீறல்கள் குறித்து உடனடி நடவடிக்கை கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கொரானா காலமானதால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த கால கட்டத்தில் வருமானமின்றி உணவுக்கு வழி இல்லாமல் திண்டாடி வருபவர்களிடம், பஜாஜ் மற்றும் எச் .டி. பி, எக்விடாஸ் எல்&டி போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனுக்கு பல மடங்கு வட்டியுடன் கடனை வசூலிப்பதற்காக தற்போது களமிறங்கியுள்ளனர்.

ஒவ்வொரு வீடு வீடாக சென்று வீட்டில் இருக்கும் பெண்களிடம் அத்துமீறி கடனை வசூலிக்க அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் வேளையில் ரிசர்வ் வங்கி,மத்திய, மாநில அரசுகள் 3 மாத காலத்திற்கு தனியார் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கடன் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தியும்,

அதனை பொருட்படுத்தாமல் கடனுக்கு வங்கியில் வாடிக்கையாளர்கள் அளித்த செக் – ஐ பவுண்ஸ் செய்தும் அதற்கும் சேர்த்து வட்டி போடுகின்றனர். ஏழைகளை குறிவைத்து வேட்டையாடும் இந்த நிதி நிறுவனங்களின் லைசென்ஸ் – ஜ ரத்து செய்ய வேண்டும் எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜன், பொருளாளர் ராஜ சாந்தி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Leave a Reply