குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்க வேண்டுமென்று தமிழ் பேரரசு கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நோய் தொற்றைத் தடுக்க பல்வேறு பகுதிகளிலும் பரிசோதனை முகாம்கள் அமைக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

சாலைகளில் வசிப்போர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொண்டு ஊரடங்கு முடியும்வரை முகாம்களில் தங்கவைத்து பாதுகாத்து அவர்களுக்கு எல்லாவிதமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்பேரரசு கட்சியின் மாநில துணைபொதுசெயலாளர் கண்ணன் தலைமையில் அக்கட்சியினர் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

அதிகாரிகளிடம் பலமுறை இதுகுறித்து கூறியபிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்தனர்.

Leave a Reply