குமரிமாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!

தூத்துக்குடி மாவட்டம் செக்கராகுடி பஞ்சாயத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த வழக்கில் செக்கராகுடி ஊராட்சி செயலாளர் மற்றும் வீட்டு உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி ஆதித்தமிழர் பேரவை சார்பாக தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று.

மேலும் கையால் மலம் அள்ளும் தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம்2013 ஐ முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும்,உள்ளாட்சிகளில் மனித கழிவுகள் சாக்கடைகளை சுத்தம் செய்ய எந்திரங்கள் வாங்க உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்,கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களை கண்டறிந்து மாற்று தொழிலுடன் மாறுவாழ்வு உறுதிபடுத்திட வழிவகை செய்ய வேண்டும்.

இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி மற்றும் ரூபாய்50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரிமாவட்டம் வடசேரி அண்ணா சிலை முன்பு ஆதித்தமிழர் பேரவை குமரிமாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில்C.அண்ணாதுரை(துணை செயலாளர் தலைமை தாங்கினார்,A.அருள் ஆனந்த்,மு.சண்முக சங்கர்,நா.சூர்ய நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply