நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் அருகே அருந்ததியர் தெரு மக்கள் அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் அருகே அருந்ததியர் தெருவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வெளியேற கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சீல் வைக்கப்பட்ட நாளில் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் எங்களை வேலைக்கு செல்ல விடாமல் வாழ்வாதாரத்தை முடக்கும் அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply