குளச்சல் பகுதியில் ரூ.13 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்..!

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், பிரின்ஸ் எம்.எல்.ஏ.விடம் குறும்பனை பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தார். அதனை ஏற்று குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் குறும்பனை பஸ்நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்தல், சூசையப்பர் குருசடி அருகில் ரூ.70 ஆயிரத்தில் தெரு விளக்கு அமைத்தல், வாணியக்குடி 39-வது அன்பியத்தில் ரூ.2.50 லட்சத்தில் காங்கிரீட் சாலை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்றன.

இந்த பணிகள் நிறைவடைந்து அதன் திறப்பு விழா ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து வாணியக்குடியில் ரூ.6¾ லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிட பணிக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் குறும்பனை பங்குதந்தை கஸ்பார், வாணியக்குடி பங்குதந்தை ஆன்றோ வினோத்குமார், ராகுல்காந்தி பஞ்சாயத்துராஜ் தலைவர் பினுலால்சிங், பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் மனோகரசிங், சுந்தர், வட்டார தலைவர் ஜெரால்டு கென்னடி மற்றும் ஊர் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply