காமராஜர் பிறந்த நாள்விழாவை முன்னிட்டு வேர்கிளம்பியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி..!

காமராஜர் பிறந்த நாள் (ஜூலை 15) விழாவை முன்னிட்டு வேர்கிளம்பியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி மாநில பொதுகுழு உறுப்பினர் ரெத்தினகுமார் தலைமை தாங்கினார். குமரி பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP 200 க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினார். அவருடன் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர்  சட்ட மன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார், திருவட்டார் வட்டரா தலைவர் ஜெகன் ராஜ், மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி, டாக்டர், தம்பிவிஜயகுமார், என்.ஏ.குமார், கனகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply