இன்றைய ராசிபலன்கள் 13-07-2020 (திங்கட்கிழமை)

இன்றைய ராசிபலன்கள்
13-07-2020 (திங்கட்கிழமை)
நல்லநேரம்
காலை 6.15 முதல் 7.15 வரை
மாலை 4.45 முதல் 5.45 வரை
ராகுகாலம்
காலை 7.30 முதல் 9 வரை
எமகண்டம்
காலை 10.30 முதல் 12 வரை

மேஷம்

பணவரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவும் ஆலோசனையும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

ரிஷபம்

தந்தைவழி உறவினர்களால் உதவிகள் தக்க நேரத்தில் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு விலகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

மிதுனம்

செலவுகளையும் சமாளித்து சேமிப்பை தொடங்குவீர்கள். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து இருக்க நேரும். சகோதரர்களால் வீண் அலைச்சலும் அதேசமயம் ஆதாயமும் உண்டு. நீங்கள் நீண்ட நாட்களாக நிறைவேற்ற முடியாமல் இருந்த காரியம் நடக்கும்.

கடகம்

முயற்சிகளின் பலனால் இன்று உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்கள் குழந்தைகளால் உங்களுக்குப் பெருமை வந்து சேரும். சகோதரர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதில் பாதிப்பு ஏதும் இருக்காது. அரசாங்க காரியங்கள் நடந்து முடிய தாமதம் ஏற்படும்.

சிம்மம்

உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமண வயதில் உள்ள ஆண் பெண்ணிற்கு நல்ல வரன் கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் . பொறுமையைக் கடைபிடிக்க வேண்டிய நாள் இது.

கன்னி

பிரிந்திருந்த கணவன்-மனைவி சேர்வதற்கான நேரமிது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசாங்க காரியங்கள் சுமுகமாக முடியும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிட்டும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம்.

துலாம்

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடன் மனஸ்தாபம் ஏற்படும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் சந்தர்ப்பம் நேரிடும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரலாம். புதிய முயற்சிகள் அனுபவத்தை தரும். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த கடனுதவி உங்கள் கைக்கு வந்து சேரும்.

விருச்சிகம்

உங்கள் பிள்ளைகள் பிடிவாதம் செய்வார்கள், அதனால் அவர்களுடன் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது. உங்களுக்கான பொருளாதார வசதி திருப்தி தரும். உங்களது வாழ்க்கைத் துணை பலவகையில் உதவுவார்கள். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு பணிச்சுமையும் அலைச்சலும் அதிகரிக்கும்.

தனுசு

உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தந்தைவழி உறவினர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். ஒரு முடிவு எடுப்பதற்கு முன் நன்கு சிந்தித்து செயல்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபம் அதிகரிக்கும்.

மகரம்

இன்றைய நாள் உங்களுக்கு நிதானம் தேவை. எந்த ஒரு செயலையும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கான மதிப்பு மரியாதை பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புண்டு, அதே நேரத்தில் செலவும் கூடும் எதிரிகளின் இடையூறுகளை முறியடிக்கும் நாளிது.

கும்பம்

உங்கள் தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் விஷயத்தில் கவனமாக இருங்கள். வியாபாரிகள் சிறப்பான பலன்களை காணலாம். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள் இது. உங்களின் நன்மதிப்பு அதிகரிக்கும்.

மீனம்

வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொறுமையாக இருங்கள். தாய்வழி உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த ஒரு முக்கியமான இடமாற்றம் உங்களுக்கு கிடைக்கும். பெண்களுக்கு வீடு மட்டுமின்றி வெளியிலும் மரியாதை கூடும்.

Leave a Reply