ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை மருத்துவர்களை ஒரு பெண் ஒருவர் குற்றம்சாட்டிய வீடியோ வெளியாகியுள்ளது..!

குமரிமாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 800க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த வாரங்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளுக்கு உணவு வழங்கவில்லை என்று வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது ஒரு புதிய வீடியோ வெளி வந்துள்ளது நோயாளிகளை கவனிக்க மருத்துவர் இல்லை என்றும் கை குழந்தையுடன் இருக்கும் எனக்கு ஏதாவது தேவை என்றால் நான் யாரை அழைப்பேன் என்று ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை மருத்துவர்களை ஒரு பெண் ஒருவர் குற்றம்சாட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் செவிலியர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார் என்றும் மருத்துவமனை மாடியில் சென்று விளையாடினர் என்று செய்திகள் வந்த நிலையில் தற்போது நோயாளிகளை கவனிக்க மருத்துவர்கள்,செவிலியர்கள் இல்லை என்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply