மக்கள் நலனில் குமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க..!

மாநகர் வடக்குப்பகுதிக்குட்பட்ட 24வது வார்டு பகுதிகளில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் குடிநீர் போர்வெல்லில் சேதம் ஏற்பட்டு 10 நாட்களாக குடிநீருக்காக மக்கள் கஷ்டப்பட்டு வந்த நிலையில், மக்களின் கஷ்டத்தை போக்க எந்த கட்சியினரும் முயற்சி எடுக்காத வேளையிலும், குமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் திரு.P.செந்தில் முருகன் BE LLB அவர்களின் ஏற்பாட்டில் குடிநீர் போர்வெல்லை சரிசெய்து அப்பகுதி மக்களின் பாராட்டுதலையும், ஆசியையும் பெற்றார்.முன்னதாக 24வது வட்டச் செயலாளர் திரு.இராஜேந்திரன் அவர்கள் மாவட்ட செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகளை சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட இணைச் செயலாளர் திருமதி.அம்மு ஆன்றோ,அம்மா பேரவை செயலாளர் திரு.கிறைஸ்ட் மில்லர்,இளைஞர் அணி செயலாளர் திரு.சுரேஷ், அம்மா தொழிற்சங்க செயலாளர் திரு.விஜயன், இளைஞர் பாசறை செயலாளர் திரு.JJ.ஜெகன், மாநகர வடக்கு பகுதி கழக செயலாளர் திரு.ஜெயபிரதாப்சிங், இளைஞர் அணி பொருளாளர் திரு.ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் திரு.சுபின்குமார்,

அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் திரு.ரூபி, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் திரு.பிரவின் குமார், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை இணைச்செயலாளர் திரு.கிறிஸ்டியன் பாபு, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை பொருளாளர் திரு.சுயம்பு மற்றும் கழக நிர்வாகிகள் திரு.சுதர்ஷன்,திரு.சுப்பிரமணி உடனிருந்தனர்.

Leave a Reply