குழித்துறை குடிமகன்களுடன் வாழைத்தோட்டத்தில் திருநங்கை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…!
.குழித்துறை சந்திப்பில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்தக் கடையின் பின்புறம், தனியாருக்குச் சொந்தமான வாழைத்தோட்டம் ஒன்று உள்ளது. இந்தக் கடையில் மதுபாட்டில்களை வாங்கும் குடிமகன்கள், அருகே உள்ள வாழைத்தோட்டத்தில் முகாமிட்டு விடுகின்றனர். அங்கு குடிப்பது உள்பட அனைத்து சகலங்களையும் செய்து கொள்ளும் குடிமக்கள், ஒரு கட்டத்தில் போதையில் அங்கேயே தூங்கியும் விடுகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியவர் அந்த வாழை தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது இறப்பிற்கு காரணம் என்ன..? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதியவர் மரணம், போலீசார் விசாரணை, வழக்குப்பதிவு என எதை பற்றியும் நினைக்காமல் குடிமகன்கள் மது வாங்குவதும், தோட்டத்தில் ஒதுங்குவதுமாகவே இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வழக்கம்போல குடிமகன்கள் வாழைத்தோட்டத்தில் மதுக்குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், வாழைத்தோட்டத்திற்கு திருநங்கை ஒருவர் உள்ளே நுழைந்தார். குடிமகன்களிடம் நேராக சென்ற அந்த திருநங்கை, அவர்கள் குடித்துக் கொண்டிருந்த சரக்கை வாங்கி மடக் மடக் என குடித்து விட்டார்.
இதனால், போதையான திருநங்கையுடன் குடிமகன்களும் குத்தாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். இந்த வீடியோவை எடுத்துக் கொண்டிருந்த நபர் திருநங்கையுடன் குடிமகன் குத்தாட்டம் போட்டதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பார்ப்பவர்களிடத்தில் முகம் சுளிப்பை ஏற்படுத்தி வருகிறது.