நாகர்கோவில் தனியார் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வசந்தகுமார் எம்.பி. வழங்கினார்..!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மேஜை மற்றும் இருக்கை வசதிகளை வசந்தகுமார் எம்.பி. வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் மார்டன் நர்சரி பள்ளிக்கு கம்ப்யூட்டர் வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் வசந்தகுமார் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அவர் தனது சொந்த பணத்தில் இருந்து கம்ப்யூட்டர் உபகரணங்களை வாங்கி பள்ளி தலைமை ஆசிரியர் எமிலியிடம் வழங்கினார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் யூஜின், ஆரோக்யராஜ் மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply