நாகர்கோவில் அருகே வட்டவளை பகுதியில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டவளை பகுதியில் 55 வயது பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா. 55 வயதான இவர் தனது கணவனுடன் அப்பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட இவர், திடீரென அருகிலுள்ள கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சடலத்தை மீட்டதோடு சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்திரிகாவுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர்.

Leave a Reply