குமரி பிரபல கொள்ளையன் கைது..!

குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவம் நடந்து வந்தது. இந்த நிலையில் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி தலைமையிலான போலீசார் நேற்று மாலை நெய்யூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிடிபட்ட வாலிபர், பிரபல கொள்ளையன் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, அவர் திருவனந்தபுரம் பீமாபள்ளி பகுதியை சேர்ந்த அஜித்கான் (வயது 25) என்பதும், தற்போது குடும்பத்துடன் தக்கலை கொல்லன்விளை பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

குமரி மாவட்டத்தில் அஜித்கான் மணவாளக்குறிச்சி, தக்கலை, நெட்டங்கோடு உள்ளிட்ட பல இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதோடு, அந்த பொருட்களை விற்று ஆடம்பரமாக இருந்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2½ பவுன் நகை, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply