கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பணியில் ஈடுப்பட்டு வரும் போலீசாருக்கு யோகா பயிற்சி…!

போலீசாருக்கு கொரோனா தடுப்பு யோகா பயிற்சியானது நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைப்பெற்று.

கொரோனா உலகம் முழுவதையும் கோடிக்கணக்கான மக்களை தாக்கி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா நடவடிக்கையில் தீவிர பணியாற்றி வரும் போலீசாருக்கும் கொரோனா வெகமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு காலத்தில் முழு நேரப்பணியினை செய்து வரும் காவலர்களுக்கு உடலுக்கும் உள்ளத்திற்கும் ஊக்கமும் சக்தி கொடுக்கும் யோகா பயிற்சியை நாகர்கோவில் ஆயுதப்படை வளாக மைதானத்தில் வைத்து பயிற்சி வழங்கப்பட்டது.

போதுவாகவே மாதம் ஒரு முறை நடக்கும் யோகா பயிற்சி இன்று கொரோனா தடுப்பு சிறப்பு யோகா பயிற்சியாகவும் நடைப்பெற்றது.இதில் காவல் கண்காணிப்பாளர். திரு.ஶ்ரீநாத் IPSஅவர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர்.திரு.ஜவகர் IPS அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார்,காவல் பணி போலீசார், மற்றும் ஊர்காவல் படை வீரர்கள் என 200க்கும் மேற்ப்பட்டவர்கள் யோகா பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

தற்போது குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாத் அவர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் காலை மைதானத்திற்கு நேரில் வந்து யோகா பயிற்சியை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

Leave a Reply