செல்லூர் ராஜூவிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!

கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டபோது மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் ஆலோசனையை ஏற்காததால்தான் கொரோனா அவர்களுக்கு ஏற்பட்டது என்று விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியானது.

இன்று அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், “கோவிட் 19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்!

எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

Leave a Reply