குளச்சல் சட்டமன்ற தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆய்வு..!

குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கடந்த தமிழக சட்டமன்ற கூட்டங்களில் குளச்சல் தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். இவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வதற்கு மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர் முட்டம் சென்று அங்கு கலங்கரை விளக்கு அருகில் காலியாக உள்ள 47 ஏக்கர் நிலப்பரப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் முட்டம் ஊராட்சி காங்., தலைவர் ஆல்பிரட், முட்டம் பி.எச்.டி. இந்தியா நிறுவனர் சூசை மரியான், முட்டம் ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply