கன்னியாகுமரி மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு..!

குமரிமாவட்டத்தில் ஊராட்சித் தலைவர்களின் பல்வேறு அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக கூறி அரசை குற்றச்சாட்டையும் அந்த முடிவை அரசு கைவிட கேட்டும் என கேட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரங்கள் பறிக்கபடுவதாக ஆட்சியரிடம் ஊராட்சி பிரதிநிதிகள் மனு அளித்துள்ளது பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில், 14வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் தேர்வு செய்த பணிகள் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பணிகள் போன்றவை ஊரக வளர்ச்சி முதன்மை இடம் ஒப்படைக்கும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியுள்ளதோடு, இத்திட்டத்தால் ஊராட்சி தலைவர்களின் அதிகாரங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave a Reply