ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஈரான் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 562 மீனவர்கள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 750 மீனவர்கள், உணவு, தங்குமிடம் இல்லாமல் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் இந்திய அரசு ஈரான் நாட்டிலிருக்கும் தமிழக மீனவர்களை மீட்க கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்து, அழைத்து வந்தது. கப்பலில் இடமில்லாததால் 44 பேர் அழைத்து வரப்படவில்லை. இவர்களை தமிழக அரசு விமானத்தில் அழைத்துவர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மீனவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.