இன்றைய ராசிபலன்கள் 10.07.2020 (வெள்ளிக்கிழமை)

இன்றைய ராசிபலன்கள்
10.07.2020 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம்
பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 வரை

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு புதிய ஒப்பந்தங்களால் பணவரவு நிச்சயம் ஏற்படும். வரும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிடிவாதங்களை தவிர்த்தல் நலம்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பெற்றோர்களால் ஆதாயம் அமையும் நாள். வாழ்க்கையில் இன்று மிக முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெற்றி உங்களுக்கே.

மிதுனம்

வாழ்வின் அடுத்த கட்டத்திற்கான வழியாக, புதிய வாய்ப்புகள் உருவாகும். திடீர் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஆனந்தமும் , அமைதியும் நிலவும். பாராட்டப்படுவீர்கள்.

கடகம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான, நம்பிக்கையான நாளாக அமையும். பதவி உயர்வு அல்லது பண வரவு உண்டு. ஆசிர்வதிக்கப்பட்ட நாள்.

சிம்மம்

உடல் நலனில் அக்கறையுடன் செயல்படுங்கள். வங்கி, பண பரிமாற்ற விஷயங்களில் கூடுதல் கவனம் அவசியம். நிதானம் தேவை.

கன்னி

இதுநாள் வரையில் உங்களது செயல்பாடுகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறி, நல்ல முன்னேற்றம் உண்டு. பயணத்தால் திருப்பம் உண்டு. பொன்னான நாளாக அமையும்.

துலாம்

இன்று உங்களது கவனக்குறைவால் பிரச்சனைகள் ஏற்படும். பொருள் இழப்பும், நேர விரயமும் ஏற்படும். கனிவான பேச்சினால் அதிகமானதை பெறும் வாய்ப்பு உண்டு. எச்சரிக்க்கையாக இன்றைய நாளை கடந்து விடுங்கள்.

விருச்சிகம்

இன்று வேலையில் சாதகமான நாளாக அமையும். சிரிப்பு நிறைந்த நாள். நீண்ட கால லாபங்களில் முதலீடு செய்வீர்கள்.

தனுசு

ஆரோக்கியமான, உற்சாகமான நாளாக இன்று அமையும். முக்கியமானவர்களுடன் நட்பு பலப்படும். உடைமைகளில் சிறிது கவனம் தேவை. முதலீட்டில் லாபம் உண்டு. நன்கு தீர விசாரித்து செய்யப்படும் முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்.

மகரம்

தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கும். கூட்டு முயற்சி உங்கள் ராசிக்கு தற்போது நிச்சயமாக பலன்களை அளிக்காது. சுபச்செலவுகள் உண்டு. பேச்சில் நிதானம் தேவை.

கும்பம்

எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் மேம்படும். இன்று உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையும்.

மீனம்

பணவரவு மேம்படும். ஆன்மிக பயணம் உண்டு. வேலைப்பளுவின் காரணமாக உடல் சோர்வு உண்டு. இன்று பிற்பகலுக்கு மேல் ஆச்சர்யங்கள் நடக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

Leave a Reply