புதுக்கடை பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை உடனடியாக மூட வேண்டும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் மனு

கன்னியா குமரி மாவட்டத்தில் காப்பிக்காடு மற்றும் புதுக்கடை பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் இங்கு மது வாங்க வருபவர்களால் கொரோனா நோய் தொற்று பரவி வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் இந்து மகாசபை வலியுறுத்தி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் காப்பிக்காடு புதுக்கடை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு நீரோடி துறை, சின்னத்துறை, பூத்துறை, இரயுமன்துறை, கொல்லங்கோடு ஆகிய பகுதியில் உள்ளவர்கள் பரக்காணி’ கல்லு பாலத்தடி, கணபதியின் கடவு, ஆகிய இடங்களில் இருந்து தாமிரபரணி ஆறு வழியாக வந்து பைங்குளம், புதுக்கடை முன்சிறை விளாத்த துறை பஞ்சாயத்துகளில் உள்ள சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மது வாங்க வந்து செல்வதால் நாளுக்கு நாள் இந்த பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.

மேலும் மேற்படி இடங்களில் உள்ளவர்கள் மது வாங்க வருவதால் நோய் பாதிப்பு மேலும் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் புதுக்கடை மற்றும் காப்பிக்காடு மதுக்கடைகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அகில பாரத இந்து மகா சபா சார்பில் மனு அளிக்கப்பட்டது..

Leave a Reply