நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் வணிகர்களை மிரட்டும் செயலை கைவிட வேண்டும் என வணிகர் சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் சாலை விரிவாக்கத்திற்கு வணிக நிறுவனங்களின் இடத்தை உரிய இழப்பீடு வழங்காமல், மாநகராட்சி அதிகாரிகள் வணிகர்களை மிரட்டும் செயலை கைவிட வேண்டும் என வணிகர் சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சி தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையொட்டி மாநகரின் பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலை விரிவாக்கம் செய்வதற்காக கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வணிகர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டுவதாகவும் தொடர்ந்து துன்புறுத்துவதாகவும் வணிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றுவதற்கு உரிய வழிமுறைகளில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வணிகர்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக அதற்கு மாறாக ஏற்கனவே கோரோனோ அச்சத்தால் பொது மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் வியாபாரம் பாதிக்கப்பட்டு மனவேதனையில் காணப்படும் மனிதர்களை மாநகராட்சி அதிகாரிகள் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் துன்புறுத்தியதால் மனநிலை பாதிக்கப்படுவதாக கூறி வணிகர் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply