நாகர்கோவில் தனது மகளை மீட்டுத் தர கேட்டு..பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

நாகர்கோவில் அருகே பட்டதாரி பெண்ணை ஏமாற்றி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், அந்த இளைஞரிடம் இருந்து தனது மகளை மீட்டுத் தர கேட்டு பெற்றோர்கள் தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தினரோடு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்..

நாகர்கோவில் அருகே வடக்கு கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுபா பட்டதாரியான இவர் ஆசிரியர் பயிற்சி படித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாயமானார். சுபா குமாரகோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞருடன் காதல் திருமணம் செய்ததாக கூறி தக்கலை காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இந்த நிலையில் தங்களை ஆணவக்கொலை செய்ய செய்யும் நோக்கோடு சுபாவின் பெற்றோர் தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காதல் தம்பதியினர் புகார் அளித்தனர். இந்நிலையில் சுபாவின் பெற்றோர் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் மகளை விக்னேஷ் ஏமாற்றி கடத்திச் சென்றுள்ளதாகவும், விக்னேஷ் ஏற்கனவே பல பெண்களை காதலித்து எமாற்றியுள்ளதகாவும், குமாரகோவில் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, அந்த பெண்ணில் சாவுக்கு காரணமானவர் எனவும், தனது மகளையும் காதலித்து ஏமாற்றி உள்ளதாக கூறி, தங்கள் மகளை மீட்டுத் தர கேட்டு மனு அளித்துள்ளனர்.

அவர்களுடன் நாடார் சத்திரிய இயக்கத்தினரும் சென்றனர். போலீசில் இது குறித்து போலீசில் இது குறித்து மனு கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதில் அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் அந்த மனுவில் விக்னேஷ் தனது மகளை தலைமறைவாக வைத்து மிரட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply