குளச்சல் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்..!

குளச்சல் அருகே ஆலஞ்சி மாதா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெனீசா (வயது 19). தொலையாவட்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமானார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் மாணவியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஜெனீசா, மணவாளக்குறிச்சி சேரமங்கலத்தை சேர்ந்த ஆனந்த் (23) என்பவருடன் குளச்சல் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவர்கள் கடந்த 6 மாதமாக காதலித்து வருவதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கெஞ்சினர். இதையடுத்து போலீசார் இருவரது பெற்றோர்களையும் அழைத்து பேசி காதல் ஜோடியை சேர்த்து வைத்து அனுப்பினர்.

Leave a Reply