குமரி மாவட்ட தொழிலாளர்களுக்கு இ-பாஸ் வேண்டும் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில் முருகன்..!

குமரி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் அண்டை மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்று வர நிரந்தர இ-பாஸ் வழங்க வேண்டும் என அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அ.ம.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

செந்தில் முருகன் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனு

குமரி மாவட்ட எல்லையான அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் அண்டை மாவட்ட பகுதியான காவல்கிணறு, வடக்கன்குளம், ராதாபுரம், பணகுடி, வள்ளியூர் போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருவார்கள். தற்போது, ஊரடங்கு காரணமாக இவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு குமரி மாவட்ட தொழிலாளர்கள் அண்டை மாவட்டங்களுக்கு சென்று வர நிரந்த இ-பாஸ் வழங்க வேண்டும்.

எல்லைப்பகுதியில் உள்ள கடைகளில் வேலை செய்து வந்தவர்கள் தற்போது வரமுடியாததால் வியாபார நிறுவன உரிமையாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, தொழிலாளர்கள், வியாபாரிகள் நலன்கருதி எல்லை பகுதிகளில் இருந்து தினமும் வேலைக்கு வருகிறவர்களுக்கு நிரந்தர இ-பாஸ் அல்லது மாற்றுவழி ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இசைக்கலைஞர்கள்

கலெக்டரிடம் அவர் கொடுத்துள்ள மற்றொரு மனுவில், குமரி மாவட்டத்தில் ஊடரங்கால் வருமானம் இன்றி வறுமையில் வாடும் கிராமிய இசைக்கலைஞர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், இந்த கடுமையான சூழ்நிலையில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் இரண்டு அல்லது மூன்று கலைஞர்களுக்காவது அனுமதி வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply