குமரியில் மூடப்பட்ட சந்தைகள் அருகே புதிய கடைகள் திறக்க கூடாது கலெக்டர் எச்சரிக்கை..!

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் காரணமாக மாவட்டத்தில் மொத்த விற்பனை சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இவை அனைத்தும் நிலைமை சீரடைந்தவுடன் மீண்டும் திறக்கப்படும். இந்த சந்தைகளிலோ அல்லது அவற்றின் அருகேயோ புதிய கடைகள் திறக்க கூடாது. மீறினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் நேற்று முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 195 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.19 ஆயிரத்து 500 வசூலானது.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 106 நாட்களில் 8 ஆயிரத்து 505 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 328 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Leave a Reply