குமரிமாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்திய பிளீச்சிங் பவுடரில் ஊழல் மிக பெரிய ஊழல்: ஆஸ்டின் எம்.எல்.ஏ..!

குமரிமாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்திய பிளீச்சிங் பவுடரில் ஊழல் மிக பெரிய ஊழல். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் எம்.எல்.ஏ அவர்கள் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சாலையோரங்கள், குடியிருப்பு பகுதிகள், தெருக்கள் , குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் பிளீச்சிங் பவுடர் தூவும் பணி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 2 மாதமாக நடந்து வருகிறது.

இதற்காக டன் கணக்கில் பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் தரமற்ற பொருட்கள் சப்ளை செய்வதாக கூறி அந்த மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.அந்த வகையான அதிக அளவு சுண்ணாம்பு கலந்த கழிவில் குறைந்த அளவு பிளீச்சிங் பவுடரை சேர்த்து போலியாக தயாரித்துள்ள பிளீச்சிங் பவுடர் கலவையை குமரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் டன் கணக்கில் கொள்முதல் செய்துள்ளனர்.

ஆகவே தனியார் நிறுவனம் தயாரித்த பொருள் தரமற்றது என்று அந்த மாவட்ட நிர்வாகமே தடை செய்த ப்ளீச்சிங் பவுடரை நமது உள்ளாட்சி அமைப்புகள் பல டன் வாங்கி பயன்படுத்தி உள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தெளிவாக தெரிகிறது.

ஆகவே குமரிமாவட்ட ஆட்சியர் அவர்கள் முறையான என்று சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆஸ்டின் அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply