ஏழை பெண் திருமணத்துக்கு நிதி உதவி வசந்தகுமார் எம்.பி. வழங்கினார்..!

குமரி மாவட்ட மக்களுக்கு கல்வி, மருத்துவம், திருமண நிதி உதவி ஆகியவற்றை வசந்தகுமார் எம்.பி. தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கி வருகிறார். இந்தநிலையில் மண்டைக்காடு படர்நிலம் பகுதியில் உள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண் திருமணத்துக்கு நிதி உதவியாக ரூ.10 ஆயிரத்தை நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் சந்திப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எச்.வசந்தகுமார் எம்.பி. வழங்கினார். அப்போது ஆனந்த், ஆரோக்யராஜன், ஸ்டார்வின், செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதே போல் முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்த பேபி என்ற ஏழை பெண்ணுக்கு சொந்த வீடு கட்டுவதற்காக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கிள்ளியூர் ஊராட்சிமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மேரி ஸ்டெல்லாவிடம், வசந்தகுமார் எம்.பி. வழங்கினார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply