ஆரல்வாய்மொழி செக்போஸ்ட்டில் போலி பாஸ் மூலம் வந்த வேன் பறிமுதல்..!

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் குமரியில் உள்ள செக்போஸ்ட்டுகளில் சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில் போலி பாஸ் மூலம் சிலர் ஆட்களை வாகனங்களில் ஏற்றி வருகின்றனர். இதனால் இ- பாசை முறையாக கண் காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலை சென்னையில் இருந்து வந்த வேன் ஒன்றை ஆரல்வாய்மொழி செக்போஸ்ட்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.கேரளா செல்வதற்கான இ-பாஸ் அவர்களிடம் இருந்தது. தொடர்ந்து துணை தாசில்தார் மேரி ஸ்டெல்லா ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருந்தார். டிரைவருடன் சேர்த்து இ-பாஸில் 8 பேர் விவரம் இருந்தது. ஆனால் வேனுக்குள் மட்டுமே 8 பேர் இருந்தனர். இதையடுத்து வேனில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது 3 குடும்பத்தினராக வந்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் குமரி மாவட்டம் திக்கணங்கோடு, ஆலஞ்சி, மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.இது குறித்து போலீசார் துணை தாசில்தாரிடம் கூறினர். இதையடுத்து வேன் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் சென்னை முனீஸ்வரன் பகுதியை சேர்ந்த ராம் ராஜை (37) போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பின்னர் வேனில் இருந்தவர்களை போலீசார் ஆரல்வாய்மொழி கல்லூரிக்கு அழைத்து சென்று சளி மாதிரி எடுத்தனர். அதன் பிறகு கன்னியாகுமரியில் உள்ள
தனிமை முகாமிற்குஅனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் ஆரல்வாய்மொழியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply