குமரி அ.ம.மு.க. புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து

அ.ம.மு.க. தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், குமரி கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகளை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நியமித்தார்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஜெஸ்டஸ் ஜெகன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் செந்தில்முருகன், இணை செயலாளர் அம்மு ஆன்றோ ஆகியோரை சந்தித்து, மாலை அணிவித்து, வாழ்த்து பெற்றனர்.

இதில் மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ், அம்மா பேரவை செயலாளர் கிறைஸ்ட் மில்லர், மருத்துவ அணி செயலாளர் ரவி, இலக்கிய அணி செயலாளர் சகாய டெல்வர், மீனவர் அணி செயலாளர் டீசஸ் பிராங்க்ளின், ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் ராகவன், சிறுபான்மை அணி செயலாளர் யூசுப், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் வெற்றி சரவணன், பகுதி செயலாளர்கள் பிரதாப்சிங், ஜோன்ஸ்கிரீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply