நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆனாலும் கோர்ட்டு பணிகள் முழுமையாக தொடங்கப்படவில்லை. எனவே கோர்ட்டுகளை திறந்து வழக்கமான பணிகளை முறையான பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள கோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமரி மாவட்ட வக்கீல் சங்கங்களின் கூட்டு குழு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவரும், நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவருமான ராஜேஷ் தலைமை தாங்கினார். வக்கீல்கள் மகேஷ், உதயகுமார் மற்றும் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.

Leave a Reply