ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தரமான முறையில் சிகிச்சை : மருத்துவமனை முதல்வர்.டாக்டர்.சுகந்தி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவு வழங்கவில்லை, அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து விடியோ பார்த்த சில அரசியல் கட்சிகளும் சில அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பொய் குற்றம்சாட்டுகளை அரசு மருத்துவமனை மீதும் நிர்வாகத்தினர் மீதும் கூறி வருவதாக குமரிமாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர். டாக்டர். சுகந்தி அவர்கள் தெரிவித்துள்ளாதால்.குமரிமாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கொரோனா நோயாளிகள் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களுக்கு தமிழக அரசானது சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருவதோடு இங்கு தங்கியிருக்கும் நோயாளிகளுக்கு நல்ல உணவும் சத்தான உணவுப் பொருள்களும் வழங்கி கவனித்து வருகின்ற இந்நிலையில் ஒருசில நோயாளிகள் அரசியல் வாதிகளின் துண்டுதலில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் தங்களுக்கு உணவு வழங்கவில்லை மருத்துவமனை நிர்வாகம் எங்களை கவனிக்கவில்லை என கூறி நோயாளிகள் வீடியோவை வெளியிட்டன்ர்.

முதல்வர்.டாக்டர்.சுகந்தி

இந்த தகவல் இணையதள வாசிகளிடம் பரவலானாது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டதற்கு
குமரிமாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கும் நோய் தொற்று பரிசோதனைக்கு வருபவர்களுக்கும் தரமான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வீடியோ சம்பவம் குறித்து சில விசமிகள் பொய்யான தகவல்களை பரப்பியுள்ளனர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தினமும் காலை.இட்லி, பிரெட், கபசுரன குடிநீர், பூஸ்ட் பால்,மஞ்சள் கலந்த பால், மதியம் உணவு சாதம்,ரசம்,தயிர், சாம்பார்,கிரை கூட்டு, மாலை.
சத்தான சுண்டல் மற்றும் பால் வழங்கப்படுகிறது.

மேலும் இரவிலும் இது போல உணவு பரிமாறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக உணவு வழங்குவதில் சில குளறுபடி ஏற்பட்டது.

என்று குமரி மாவட்ட ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வர்.டாக்டர்.சுகந்தி தெரிவித்தார்.

Leave a Reply