மூன்று இல்லை இனி இரண்டு தான்…! எம்சிஏ மாணவர்கள் ஹேப்பி…!

டெல்லி: எம்சிஏ பட்ட மேற்படிப்பு, 2 ஆண்டுகள் கொண்ட படிப்பாக மாற்றம்  செய்யப்படுவதாக அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

வழக்கமாக முதுநிலை பட்டப்படிப்பின் காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஆனால் எம்சிஏ படிப்பின் காலம் மட்டும் 3 ஆண்டுகள். அதனால் மாணவர்கள் கால தாமதமாக படிப்பை முடிப்பதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந் நிலையில் 3 ஆண்டுகளாக இருந்து வரும் எம்சிஏ படிப்பு வரும் கல்வி ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதி குழுவின் ஒப்புதலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக கல்விக் காலம் குறைக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

Leave a Reply