மாஸ்க் போடவில்லை என்றால் மீன் மார்க்கெட்டில் அனுமதிக்க கூடாது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை காசிமேட்டில் பொதுமக்களுக்கு மீன் சில்லறை விற்பனை நடைபெறாது என்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மீன் விற்பனை செய்யலாம், தற்போது துறைமுகத்தில் சில்லறை விற்பனை செய்யும் வியாபரிகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டது, இந்த நிலையில், சென்னை மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்டார். காசிமேடு உள்ளிட்ட இடங்களில் சமூக விலகலுடன் மீன் கடைகளை அமைப்பது தொடர்பாக ரிப்பன் மாளிகையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாஸ்க் அணியாமல் மீன் மார்க்கெட்டுக்கு வருபவர்களை அனுமதிக்க கூடாது என்றும் காசிமேட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு தற்போது அனுமதி கிடையாது என்றும் கூறினார். மேலும், மீன் மார்க்கெட்டுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல தனியாக பாதை அமைக்க வேண்டும் என்று கூறிய அவர் மீன் போன்ற அழுகக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல பாஸ் தேவை இல்லை என்றும் கூறினார்.

Leave a Reply